articles

img

விளையாட்டு அல்ல... வியாபாரம்!

விளையாட்டை அரசியலுக்கும் வர்த்தகத்திற்கும் பயன்படுத்த முடியும் என்பதே தற்போதைய கிரிக்கெட் போட்டியாக மாற்றப்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டிகளை, குறிப்பாக கிரிக்கெட்டை பல பெரும் நிறு வனங்கள் தங்களுடைய வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்துகின்றன.

அதற்கான விளம்பரங்கள், டிக்கெட் கட்டணங்கள் என்பதைத் தாண்டி, தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் பொறித்த ஜெர்சிகள், ஷூக்கள், பேனாக்கள், டைரிகள், மக்குகள் (mug), கீ செயின்கள், டீ சர்ட் போன்றவை நிறுவனங்களில் எதிர்பார்க்காத வகை யில் பெரும் எண்ணிக்கையில் விற்பனை யாகியுள்ளது தெரியவந்துள்ளது.

“ஆண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா வும் ஆஸ்திரேலியாவும்  மோதின. அது அனைவருக்கும் ‘சூப்பர் ஞாயிற்றுக் கிழமையாக’ கடந்தது. சினிமா தியேட்டர் கள், உணவகங்கள் என எல்லாம் களை கட்டின. நான்கு வாரங்களாக நடைபெற்ற போட்டிகளில் மைதானம் முழுவதும் கடல் போல் நீல நிறமாக மாறும் அளவுக்கு நீல நிற ஜெர்சி அணிந்து மாற்றியிருந்தார்கள் ரசிகர்கள். அவ்வளவு நீல ஜெர்சிக்கள் கடைகளிலும் ஆன்லைன் மூலமாகவும் விற்றுத் தீர்ந்தன.

இதில் நம்பர் ஒன் விற்பனையாளராக ‘அமேசான் பேஷன்’ உள்ளது. இந்நிறு வனத்தின் செய்தித் தொடர்பாளர், கடைசி இரண்டு மூன்று நாட்களில் பிரமிக்கத்தக்க வகையில் விற்பனை நடந்ததாகக் கூறுகிறார்.

ஆண்கள், பெண்களுக்கான ஷூக்களை சனிக்கிழமை அன்று ,2023 ஜோடிகளை மட்டுமே விற்பனை செய்வதாக அடிடாஸ் நிறு வனம் அறிவித்து, விற்பனைசெய்துள்ளது.

போலோ(POLO)கம்பெனியின் டி-ஷர்ட்கள், ஜாக்கெட்ஸ், கீ செயின்ஸ், கோப்பைகள் (MUGS) டைரிகள் (DIARIES), பேனாக்கள் உள்ளிட்டவை மிகப்பெரும் அளவு விற்பனை செய்யப்பட்டதாக (Yannick colaco) யான்னிக் கோலாக்கோ நிறுவனம் தெரிவிக்கிறது.

ஐசிசி உலகக்கோப்பையின்  இணை நிறுவனமாக எப்.சி.ஷாப் உள்ளது. இவர்கள் ( INSTAMART )இன்ஸ்டா மார்ட்  மூலம் (swiggy) ஸ்விக்கியுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி பொருட்களை மிக விரைவாக பல்வேறு நகரங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.உணவகங்களோடும்  இதுபோல ஒப்பந்தங்கள்  மேற்கொள்ளப்பட்டன என் கிறார்கள். 60க்கும் மேற்பட்ட நகரங்களில் 150 தியேட்டர்களில் இறுதிப் போட்டியை (PVR INOX) பிவிஆர் ஐநாக்ஸ் நேரடி யாக ஒளிபரப்புச் செய்தது. அதிக எண்ணி க்கையில் முன்கூட்டியே பதிவு செய்யப் பட்டது குஜராத்திலும் மகாராஷ்டிராவிலும் தான்.

மிகப்பெரும் வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றதால் மேலும் பல தியேட்டர்களில் (screens)ஸ்கிரீன்களை அதிகப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது என்கிறார். பி.வி.ஆர்.ஐநாக்ஸ் நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் குமார் பிஜிலி.

‘சிராஜ் சினிமா’ நிர்வாக இயக்குநர் அமித் சர்மா, 70  முதல் 80 சதவீதமான டிக்கெட் முன்கூட்டியே விற்பனையானது என்றும், 23 நகரங்களில் 30 மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் நேரடியாக இறுதிப் போட்டி ஒளிபரப்பப்பட்டதாகவும் கூறுகிறார்.

பெரும் விளம்பரத்தின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை  உருவாக்கு வதும், அவ்விளம்பரத்தின் மூலமே தங்களுடைய பொருள்களை விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டுவது பெரும் நிறுவனங்களின் திட்டமிட்ட செயலாக நடக்கிறது.

மேலும் ஐசிசி வெளியிட்ட தரவு களின்படியே உலகக்கோப்பை போட்டியின் போது ஏராளமான (sponsers) விளம்பர தாரர்கள்  மூலம் மிகப்பெரிய தொகை வரு கிறது. உதாரணமாக வெறும் 20 விளம்பர தாரர்கள் ஸ்பான்சர் மற்றும் போர்ட் ஃபோலியோவை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் பல பிரிவுகளில் பார்ட்னர்கள் இணைந்துள்ளனர். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்  போட்டியில், கைமாறிய மொத்த வர்த்தகத்தின் மதிப்பு 1248 கோடி ரூபாய்.

பிசினஸ் லைனில் வெளியான விபரங்களுடன்...
- ஆர்.மைதிலி